Thursday, 11 June 2020

பிறந்த நாள் வாழ்த்துக்கள்


5-06-2018.
----------------------------------------------------------------

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
.
******************************
.
கமலமே உருவான கமலனானவன்
கமலத்திலும் அழகான ஆழகானவன்
கமலருக்கு மடிபிறந்த செல்வனிவன்
கமலமும் மகிழ்கின்ற கமலனிவன்.
.
கொள்கையிலே வாழுகின்ற அண்ணனிவன்
கொடுக்கின்ற கைகளை காட்டாதவன்
எழுதுகோலால் உலகறிந்த முனைவரிவன்
எழுதுகின்ற வார்த்தையிலே வாழ்கின்றவன்.
.
தமிழ்த்தாய்க்கு தொண்டாற்றும் சோதரனிவன்
தமிழ்த்தாயே ஈன்றெடுத்த இளையமகன்
வாழுகின்ற வாழ்க்கையிலே வளமாக
வானோரே மனங்கொண்டு வாழ்த்துகிறேன்.
.
வாழ்த்துக் கவிதை
தம்பி
கவிஞர் கருங்கல் கி.கண்ணன்

No comments:

Post a Comment