அன்பு தமிழ்ச் சொந்தங்களே!
வணக்கம்
இன்று சிரித்த முகச் சொந்தக்காரர், தமிழ் வளர்க்கும் பண்பாளர், கிரேசு கல்வியல் கல்லூரி முதல்வர், காணொளி (யூப்டீப்) சிந்தனையாளி , நமது தமிழன்னை தமிழ்ச் சங்க துணைத் தலைவர், எமது பாசமிகு அண்ணா திரு. கமல. செல்வராசு அவர்களுக்கு இன்று பிறந்தநாள் . வாழ்த்துவோம் வாங்க....
சிற்றாறு சல சலக்க ஓடிவரும்!
சிறு மீன்கள் அழகாகத் துள்ளலிடும்!
வற்றாத நீர் வளங்கள் நிறைந்திருக்கும்!
போற்றுகின்ற ஈசனவர் வீற்றிருக்கும்!...
கேசவனும் அவதார நரசிம்மரும்!
காசினியில் உயர்ந்தெழுந்த மலைமீதே!
காக்குகின்ற காளி அன்னை இருப்பிடமே!
காவலுடன் அமைத்திருக்கும் மண் நாடான்!...
பூக்குகின்ற செங்கமலம் பெயர் சொல்லும்!
பூமேடை இலக்குமியின் அருள் வீசும்!
மணமாக மலையாளத் தமிழ் பேசும்!
குணமானத் தமிழன்னை திருமகனன்!...
மண்டைக்காட்டு தேவி அன்னை அருளாளன்!
மனம் வணங்கும் ஐயப்பன் பக்தனவன்!
மனைவி மக்கள் பாசத்திலே சிறப்பானவன்!
சித்தராலயா பிள்ளைகளின் தாய் மாமன்!...
நூறாண்டு மேல் மேலும் தரணியிலே சிறப்பாக
நயமாக வாழ்வாக கனியாக தித்திக்க
ஞாலத்தில் வாழ்வாங்கு வாழ்கவென்று
ஞாலத்தில் மூத்தவளே உனதருளால் வாழ்க நீடு!....
வாழ்த்துக் கவிதை
கருங்கல் கி. கண்ணன்
நிறுவனர்
தமிழன்னை தமிழ்ச் சங்கம்
No comments:
Post a Comment