நாட்டுப்புற வீடுகளும் வேலிகளும்.
புதுமையை விரும்பும் மனிதர்களில் சிலருக்குப் பெயர் பொருத்தமாக அமைவதுண்டு. அந்த வகையில், கருணை உள்ளம் கொண்ட முனைவர் நா. புண்ணியமூர்த்தி அவர்களுக்கு, பெயர் மிகவும் பொருத்தமாகவே அமைந்துள்ளது.
இவர் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், இனாம்கிளியூரில் 07-03-1982 ஆம் ஆண்டு தெய்வத்திரு ம. நாகமுத்து அவர்களுக்கும், நலமுடன் நா. சாமியம்மாள் அவர்களுக்கும் முதல் மகனாகப் பிறந்தார். மாரியம்மாள் (ஸ்டெல்லா) என்ற தங்கை உடன்பிறந்தவர் ஆவார். சொந்த ஊரிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடக்கக் கல்வியைத் தொடங்கி, சென்னைப் பல்கலைக்கழகத்தில், இளங்கலையும் முதுகலையும் தமிழ் இலக்கியத்தில் முடித்து, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், நாட்டுப்புறவியல் துறையில் ஆய்வியல் நிறைஞரும், முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 'புதுமலர் வீசியப் பூந்தென்றல்' என்னும் கவிதை நூல் இவருடைய முதல் தொகுப்பாகும்.
'நாட்டுப்புற வீடுகளும் வேலிகளும்' என்ற இரண்டாவதாக வெளிவரும் இந்த நூலில், பழமையான வீடுகளையும் வேலிகளையும் தேடித் தேடிப் பதிவு செய்துள்ளார். இந்நூல் தமிழர்களின் பழமைகளைப் பதிவுச் செய்திருக்கும் பண்பாட்டுப்பேழை ஆகும். மேலும் பல நல்ல நூல்களைத் தொடர்ந்து எழுதி வெளியிட்டுத் தமிழ் அன்னைக்கு வழங்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். இவருடைய அன்பும் அறிவும் பாரறியும் படைப்பாளியாக உயர்த்தும் என்பது திண்ணம்.
முனைவர் கமல. செல்வராஜ்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
கல்வி மேம்பாட்டுக் கேந்திரம், தமிழ்நாடு.
(நியூ செஞ்சுரி பதிப்பகத்தால் பிரசுரம் செய்யப்பட்டிருக்கும் இப்பயனுள்ள நூலின் விலை ரூ.250/- நூலாசிரியரின் தொடர்புக்கு:9952752874)

